Thursday 13 October 2016

தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி அக்டோபர் 14ந் தேதி முதல் 16ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது

தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் 10ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 14ந் தேதி முதல் 16ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.
இக் கண்காட்சியல் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர் வராலறு, தமிழர் மரபு உணவுகள் மற்றும் விளையாட்டுகள், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் இசைக் கருவிகள் அதன் விளக்கங்கள், தமிழர்களின் 64 கலைகள், தமிழ் மண் சார்ந்த பயன்தரும் மூலிகைகள் அதன் விளக்கங்கள் மற்றும் சித்த மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் உங்கள் உடல்நலம் பற்றிய இலவச சித்த மருத்துவ முகாம், மேலும் தமிழர் மரபை நினைவூட்டும் பலவகை அரிய காட்சிகள், உண்டு மகிழ தமிழர்களின் மரபுவழி உணவுகள் மற்றும் அரிசிகள், சிறு தானியங்கள், மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், சர்க்கரை வகைகள், முளையூட்டப்பட்ட பயிர் சத்து வகைகள், மூலிகைச்சாறு, மலைத்தேன், குடம்புளி போன்ற இயற்கை விளைப்பொருட்கள், உணவு மற்றும் உணவுப்பழக்க குறிப்பும், சிறப்பு வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
மேலும் தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்ப் பண்பாட்டுத் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
அனைவரும் வருக.

No comments:

Post a Comment